உங்களை போன்ற பெண் இப்படி செய்யவேண்டாம் : குஷ்புவுக்கு பதிலடி கொடுத்த சின்மயியின் கணவர்!!

1346

சின்மயியின் கணவர்

சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய குஷ்புவுக்கு சின்மயியின் கணவர் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார். இது குறித்து பேட்டியளித்த நடிகை குஷ்பு, சின்மயி ஏன் அப்போதே பாடகர்கள் அமைப்பில் புகார் தெரிவிக்கவில்லை என கூறினார்.

இதற்கு சின்மயி, இன்னும் எவ்வளவு காலம் எங்களயே கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்கள். எப்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்பீர்கள் என குஷ்புவிடம் கேட்டார்.

இந்த பதிலை சுட்டிகாட்டி சின்மயி கணவர் ராகுல் குஷ்புவிடம் சில விடயங்களை டுவிட்டரில் கேட்டுள்ளார். அதில், நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானதாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரானது.

ஏன் அப்போதே பேசவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை சுதந்திரமான, சிந்திக்கும் திறன் கொண்டவரக்ள் எப்போதோ கேட்பதை நிறுத்தி விட்டார்கள்.

ஆதாரம் இருந்தாலும், சட்ட ரீதியாக போராட காலம், சக்தி, பணம் நிறைய செலவாகும். தீர்வு கிடைக்குமா என்ற உத்தரவாதம் கிடையாது. பலரிடம் போராட சக்தி இல்லை. அப்படியான போராட்டத்தில் உணர்ச்சிரீதியாக எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

2018லும் கூட பாதிக்கப்பட்டவர்களிடம் தான் விசாரணை நடக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் அல்ல. குற்றவாளிகள் செல்வாக்குடையவர்களாக இருக்கும்போது எப்படியும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

உங்களைப் போன்ற மரியாதைக்குரிய ஒருவரின் முக்கியமான குரல், இப்படியான கேள்விகளை மீண்டும் கேட்கும்போது, அது இந்த இயக்கத்தை பல தூரம் பின்னுக்குத் தள்ளுவது மட்டுமல்ல, தேக்கமடையச் செய்கிறது.

இது, கதையை அழகாக மாற்றி மீண்டும் அழுத்தத்தை பாதிக்கப்பட்டவர்கள் மீதே வைக்கிறது ஆனால் உங்களைப் போல வெளிப்படையாகப் பேசும் ஒரு பெண் அவர்கள் மீது இன்னும் அழுத்தம் தர வேண்டாம். கண்டிப்பாக உங்களிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி நண்பர்கள் பகிர்ந்திருப்பார்கள்.

தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவரின் பெயர் சொல்லும் தைரியம் இன்னும் தனக்கு வரவில்லை என லேடி காகா போன்ற சர்வதேச நட்சத்திரமே சொல்கிறார். அப்படியென்றால் வெளிப்படையாகப் பேசுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்திருக்கும். தயவுசெய்து அதை இன்னும் கடினமாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.