கன்னியாகுமரி….
பூதப்பாண்டி அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
வறுமையின் காரணமாக சிறுமி, எட்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு காணிமடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் பல முறை அந்த சிறுவன் சிறுமியை தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தையை சிறுமியிடம் கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த அந்த சிறுவனை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் சிறுவனை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் .இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனை நெல்லையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது இதனையடுத்து சிறுவன் நிலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.