ஆபாசத்தின் உச்சத்தை தொடும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியினால் நடிகர் பிரசன்னாவுக்கு வந்த சிக்கல்!!

709

சொப்பன சுந்தரி

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து சிறியவர் முதல் பெரியவர் வரை கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் முகம் சுழிக்க வைக்கின்றன.

பிரபல டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சிகளில் பெண்களை ஆபாசமாக கட்டுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், அதற்கு போட்டியாக தற்போது மற்றொரு பிரபலமான தொலைக்காட்சி சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் பிரசன்னா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தனர். அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து குறித்த டிவி இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை குடும்ப ரசிகர்கள் பார்க்க முடியாது என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தற்போது சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் போட்டியாளர்ர்கள் மிகவும் கவர்ச்சியில் எல்லை மீறி போய்கொண்டிருப்பது குடும்ப ரசிகர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் இந்த குறைகூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பேராசிரியர் மினர்வா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்று பெருமை படாதீர்கள் பிரசன்னா. உங்கள் நிகழ்ச்சியில் இருக்கும் மாடலின் ஆபாசமான புகைப்படம் ஒன்றையும் நான் பார்த்தேன். உங்கள் நிகழ்ச்சியில் இருக்கும் நடுவருக்கு மாடல் மீது அத்துமீறி நடந்து கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சி எப்படி ஒரு மனிதாபிமானமுல்ல ஷோ என்று நினைக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.