189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!!

838

உயிர் தப்பிய நபர்

இந்தோனேஷியா விமான விபத்தில் சிக்க வேண்டிய நபர் அதிர்ஷ்டவசமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

இந்தோனேஷியாவின் தலைநகர் Jakarta-விலிருந்து Pangkal Pinang விமானநிலையத்திற்கு Lion Air’s JT-610 என்ற விமானம் 189 பேருடன் புறப்பட்டுச் சென்றது.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலிலே விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விமானத்தில் Bandung பகுதியைச் சேர்ந்த Sony Setiawan என்ற நபரும் பயணிப்பதாக இருந்தது. ஆனால் அவர் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை எனவும், தற்போது பத்திரமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Jakarta-வில் இருந்த மோசமான போக்குவரத்து நெரிசல் காரணமாக Sony Setiawan-வானால் உரிய நேரத்தில் விமானநிலையத்தை வந்தடைய முடியவில்லை.

இதனால் அவர் விமானத்தில் பயணம் செய்யவில்லை, பத்திரமாக அடுத்த விமானத்தில் Pangkal Pinang பகுதிக்கு வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. Sony Setiawan கூறுகையில், நான் எப்போதும் வழக்கமாக விமானநிலையத்திற்கு 3 மணிக்கு எல்லாம் வந்துவிடுவேன், ஆனால் அன்றைய தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்த காரணத்தினால் என்னால் விமானநிலையத்திற்கு காலை உள்ளூர் நேரப்படி06.20 மணிக்கு தான் வர முடிந்தது.

விமானத்தை தவறவிட்டுவிட்டேன். என் குடும்பத்தினர் அனைவரும் தான் பயணிக்க வேண்டிய விமானம் விபத்தில் சிக்கிவிட்டதால், தனக்கும் ஏதோ ஆகிவிட்டது என்று அதிர்ச்சியடைந்தனர்.

என் அம்மா அழத் தொடங்கியுள்ளார். அதன் பின் நான் பத்திரமாக உள்ளேன் என்று தகவல் தெரிவித்த பின்னரே அவர்கள் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

விமானத்தில் பயணித்திருந்தால் அவரும் இறந்திருக்க கூடும், ஆனால் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணத்தில் தற்போது அவர் உயிர்பிழைத்துள்ளதால், அவரை அனைவரும் அதிர்ஷ்டசாலி, கடவுள் தான் அவரை காப்பாற்றியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.