தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – சிம்மம்

1467

தாய் மண்ணின் மீதும், மொழியின் மீதும் தீராத தாகம் கொண்ட நீங்கள், கடல் தாண்டி போனாலும் கலாச்சாரத்தை மீற மாட்டீர்கள். வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். உங்களது 10வது ராசியில் இந்த 2018ம் வருடம் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுடைய ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் பகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களது ரசனை மாறும். சாதூயர்மாகப் பேசி சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது உங்களுடைய ராசிநாதன் சூரியன் பகைக்கோளான சனியுடன் இணைந்து நிற்பதால் முன்கோபம் அதிகமாகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருபகவான் 3ம் வீட்டில் மறைந்து காணப்படுவதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.

ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். சில நேரங்களில் எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.

தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள்.

உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். அரசிடமிருந்து முறையான கட்டிட வரைப்பட அனுமதி பெறாமல் கட்ட வேண்டாம். வருடம் முடியும் வரை சஷ்டமசப்தமாதிபதியான சனி 5ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். எதையுமே யோசிக்க முடியாமல் ஆழ்மனதில் ஒருவிதமான குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். அவரின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் செலவுகள் அதகிரிக்கும். வேலைச்சுமை அதிகரித்து சோர்வடையச் செய்யும். தூக்கம் குறையும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயும், சனியும் சேர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். சாலையை கடக்கும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம்.

03.05.2018 முதல் 30.10.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயும், கேதுவும் சேர்வதால் வி.ஐ.பி களுக்கு நெருக்கமாவீர்கள். ஏமாற்றுக் காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 14.1.2018 முதல் 07.2.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாருடன் கவனமாக பழகுங்கள்.

திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் மோதல்கள் வரும். இந்தாண்டு முழுக்கவே உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

வியாபாரிகளே! போட்டிகளை சமாளிப்பீர்கள். தொலைக்காட்சி, வானொளி, வாட்ஸ்அப் விளம்பரங்களை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தி லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்வீர்கள். சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களை வேலையாட்களாக நியமிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். சிலர் கடையை நவீனமாக்குவீர்கள். புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், பெட்ரோகெமிக்கல், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களே! சூட்சுமங்களை உணருவீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாற வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கலைத்துறையினரே! ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள். புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். போட்டி, பொறாமையால் தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கவனமாக இருங்கள்.

விவசாயிகளே! சென்றாண்டில் ஏற்பட்ட இழப்பை இப்போது சரி கட்டுவீர்கள். மரப்பயிர்களால் காசு, பணம் பார்ப்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். இந்த 2018ம் வருடம் உங்கள் செயல் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:விருதுநகருக்கு அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மனை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.