தூக்கில் தொங்கிய இளம் தாய் : மகள் குறித்து உருக்கமான கடிதம்..!!

1131

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் மனைவி ஜனனி (32). கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள் ஆவார்கள். தம்பதிக்கு தனுஷியா (6) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜனனி தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜனனியின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கிருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள்.

அதில், எனக்கு வாழபிடிக்கவில்லை, எல்லாமே சூனியமாக தெரிகிறது. இதனால் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். நல்ல கணவர், நல்ல குழந்தை, நல்ல பெற்றோர், நல்ல வேலை என அனைத்தும் கிடைத்திருந்தும் எனக்கு மனதில் வெறுமை ஒன்றே மிச்சமாக உள்ளது.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய உடலை முடிந்தவரை எனது மகளுக்கு காட்டவேண்டாம். அம்மா ஊருக்கு சென்றுவிட்டார் என்று கூறிவிடுங்கள் என்று ஜனனி எழுதியுள்ளார்.