பீர் பாட்டிலில் பாம்பு!! அதிர்ச்சியடைந்த நபர்!!

943

தமிழகத்தில் பீர் பாட்டிலில் பாம்பு இருந்ததால், அதை வாங்கிய நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இங்கு மது பிரியர் எப்போதும் போல் பீர் ஒன்றை வாங்கியுள்ளார்.

அதன் பின் குடிப்பதற்காக பீர் பாட்டிலை பார்த்த போது, பாட்டிலின் உள்ளே பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த தகவல் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்ததால், 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு உடனே தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருந்த போதிலும் சிலர் தெரியாமல் அதை அவர் குடித்திருந்தால் உயிர் என்ன ஆகியிருக்கும் என்று கூறியதால்  டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது.