நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

169

நடிகர் அர்ஜுன்

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் அர்ஜுனை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிபுணன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் பொலிசில் புகார் அளித்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் பொலிசார் அர்ஜுன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.

இந்நிலையில் தன் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரியும், கைது நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரியும் அர்ஜுன் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் நடந்திருப்பது 3 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதால் அர்ஜுனை கைது செய்ய தடை விதித்தது, ஆனால் அவர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவில்லை. அர்ஜுனை கைது செய்யாமல் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.