நீரில் மூழ்கிய நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!!

114

இளம்பெண்ணின் சடலம்

வேலூர் அருகே நீரில் மூழ்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அருகே உள்ள சதுப்பேரி பகுதியில் நீரில் மூழ்கியபடி இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீரில் சடலமாக மிதந்தவரின் பெயர் அனிதா என்பதும், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.

தீபவளியன்று அனிதாவிற்கும் பெருமாள் நகர் பகுதியில் வசித்துவரும் அவருடைய கணவர் கதிரேசனுக்கும் இடையில் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அனிதா சடலமாக கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.