நைட்டி அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் பெண்களுக்கு அபராதம்!!

2691

பெண்களுக்கு அபராதம்

இந்தியாவில் இருக்கும் கிராமத்தில் பகல் நேரத்தில் நைட்டி அணிந்து கொண்டு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அதிரடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் தோகலாப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் பெண்கள், எல்லா பெண்கள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ள நைட்டியை தேர்வு செய்கின்றனர். இது மற்ற இடங்களில் சாதரணமாக பார்க்கப்பட்டாலும், இந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் மூதாட்டிகள் இது குறித்து ஒரு முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

அதில், பெண்கள் கடைகளுக்கும், பிற பகுதிகளுக்கும் செல்லும் போது நைட்டி அணிந்து செல்வது மிகவும் அநாகரிகமாக தோன்றுகிறது என்பதால் இந்த முடிவை அந்த ஊர் மூதாட்டிகள் ஒன்று சேர்ந்து எடுத்துள்ளனர்.

மேலும் தடையை மீறி பகல் நேரத்தில் நைட்டி அணிந்தால் அவர்களுக்கு 2000 ரூபாய் அபாராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த முறை கடந்த ஆறு மாத காலமாக அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த விவகாரம் தீபாவளியன்று, வெளி உலகிற்கு தெரிய வரவே இந்த புதிய திட்டம் குறித்து விசாரணை செய்ய அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று உள்ளனர். ஆனாலும் இது தொடர்பாக எந்த புகாரும் அவர்களிடம் பெண்கள் தெரிவிக்கவில்லையாம், ஏனெனில் இந்த முறையை அந்த ஊர் பெண்கள் வரவேற்பதாக கூறப்படுகிறது.

மேலும் நைட்டி அணிவது தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டாலோ அல்லது தண்டனை ஏதாவது வழங்கப்பட்டாலோ தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அந்த ஊர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அங்கிருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கூறுகையில், இத்தீர்மானத்தை நாங்கள் ஆறுமாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டோம். இதுநாள்வரை எந்தவித ஆட்சேபனையும் வந்ததில்லை. உண்மையில் பெண்கள் எங்கள் முடிவை வரவேற்றுள்ளனர். இந்த உத்தரவுக்குப் பிறகு பெண்கள் தாங்களாகவே இதை பின்பற்றத் தொடங்கிவிட்டதால் அபராதம் விதிக்கப்படுவது போன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.

அபராதத் தொகை செலுத்துவது என்பது இங்குள்ள ஒரு வழக்கமான நடைமுறை. நாங்கள் எந்த விதிமுறைகளையும் எங்கள் சமுதாயப் பஞ்சாயத்து மூலமாகத்தான் கொண்டுவருவோம். கொல்லேரு ஏரியைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இதுதான் நடைமுறை என்று கூறியுள்ளார்.