பிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்!!

881

பெண் குழந்தைகள்

கென்யாவின் டானா ரிவர் பிராந்தியத்திலுள்ள ஒரோமோ சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பெண் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே நிச்சயிக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நபர் ஒருவர் கூறுகையில், பிறந்து நான்கே மாதமான எனது குழந்தையை இப்ராஹிம் என்ற சிறுவனுக்கு நிச்சயித்துவிட்டேன்.

நான் இறந்துவிட்டால் கூட அவளை யாரும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவள் அவனுக்காக காத்திருப்பாள் எங்களது கலாச்சாரம் அப்படி தான் உருவாக்கப்பட்டுள்ளது, இது இப்படியே தொடர்வதையே நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதை குறிப்பதற்காக எதிர்கால மாப்பிள்ளையின் தந்தை குழந்தையின் கையில் டாராரா என்ற கயிறை அணிவிப்பார். நான் அந்த சிறுவனை தேர்ந்தெடுத்து அவரது தந்தையிடம் என் குழந்தைக்கு டாராரா அணிவிக்குமாறு கூறினேன்.

குழந்தையாக இருக்கும் போதே அவளுக்கு திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதை குறிக்க இது பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் தங்களது பெண் குழந்தைகளுக்கு எது நேர்ந்தாலும் பார்த்துக்கொள்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று பெற்றோர் நம்புகின்றனர்.

தனது குழந்தைக்கு எது நல்லது என்பது தந்தைக்கு தெரியுமென்பதால் பெண்கள் மறுப்பு தெரிவிப்பதில்லை. குடும்பங்களுக்கு இடையேயான பிணைப்பை இந்த பாரம்பரியம் வலுப்படுத்துவதாகவும் இவர்கள் நம்புகின்றனர்.