நண்பர்கள் விட்ட சவால் : அட்டையை சாப்பிட்டவருக்கு 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை!!

739

பரிதாப நிலை

தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ஆஸ்திரேலியர் நபர் ஒருவர் 8 ஆண்டுகள் கழித்து இறந்துள்ளார். ஆஸ்திரேலியா சேர்ந்த சாம் பலார்ட் என்பவரை இப்பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார்.

தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பலார்ட் ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் இறந்திருக்கிறார்.

சாம் பலார்ட் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொஞ்சம் சரியா பின்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சாம் பலார்ட் நீண்ட போராட்டத்துக்குப் பின் சமீபத்தில் காலமானார்.

நத்தையின் உடலில் இருந்த நுரையீரல் புழுதான் இதற்குக் காரணம் என்று மருத்துவ பரிசோதனை பின் தெரியவந்திருக்கிறது. சாம் பலார்ட் முறையாகச் சமைக்காமல் இறைச்சியை உட்கொண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு உதாரணம் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.