என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன் : பிரித்தானியா இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

1051

இளம் பெண்

பிரித்தானியாவைச் சேர்ந்த யூரோ மில்லியன் லாட்டரி வின்னர் பெண் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் தேவை என்று கூறி வருடத்திற்கு 60,000 பவுண்ட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியைச் சேர்ந்தவர் Jane Park. 23 வயதான இவர் தன்னுடைய 17 வயதில் ஒரு மில்லியன் பவுண்ட்சுக்கு சொந்தக்காரியாக மாறினார்.

அதாவது இவருக்கு ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் லாட்டரியில் பரிசாக விழுந்தது. இதை வைத்து இவர் புதியகார்கள், அழகுக்காக மார்பக அறுவை சிகிச்சை மற்றும் உடலில் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகள் செய்து கொண்டார். இதையடுத்து இவர் தன்னுடைய காதலனை பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தற்போது தனியாக இருக்கும் Jane Park தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு ஆண் வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அந்த நபருக்கு ஆண்டுக்கு 60,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 1,34,09,648 கோடி ரூபாய்) தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

தனியாக இருப்பதால், இவர் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதை உணர்வதாகவும், உண்மையான தன்னை பார்த்து கொள்ளும் ஆண் ஒருவர் வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்படவுள்ளதாகவும், அதில் விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.