சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட இளம்பெண் : மீட்க வலியுறுத்தி தாயார் கோரிக்கை!!

694

கடத்தப்பட்ட இளம்பெண்

சவுதி அரேபியாவுக்கு கடத்தப்பட்ட தன் மகளை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவிசெய்ய வேண்டும் என இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தமது மகளை வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரு முகவர்கள் கடத்திச் சென்றுவிட்டனர் என ஹபீப் உன்னிஸா புகார் அளித்துள்ளார்.

ஹலீம் உன்னிஸா, மார்ச் 20/17ல் ரியாத் சென்றுள்ளார். ஆனால் இப்போதுவரை அவர் நாடு திரும்பவில்லை. அங்குள்ள ஒரு அழகுநிலையத்தில் அவருக்கு வேலை இருப்பதாகக் கூறி இரு ஏஜென்டுகள் அவரை அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்கு தமது மகளுக்கு மிகுந்த தொல்லைகள் ஏற்பட்டுள்ளதாக ஹபீப் உன்னிஸா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏற்கெனவே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் இப்பிரச்சினையில் இந்திய அரசாங்கம் தலையிடடு உதவ முன்வர வேண்டும் என ஹபீப் உன்னிஸா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், பாதிக்கப்பட்டவரின் உறவினர் முகம்மது ஆஸிப் கான் கூறுகையில், ரியாத்தில் எனது சகோதரிக்கு ரூ.25 ஆயிரம் மாத சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறினர்.

ஆனால் அங்கு அவர் வீட்டுவேலை செய்பவராக உள்ளார். எனவே அவரை திருப்பி தாய்நாட்டுக்கே அனுப்பிவைக்கும்படி நாங்கள் கேட்டோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. இதனால் நாங்கள் இந்திய தூதரகத்தை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.