19 வயது இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 36 வயது மனைவி : மீட்டு கொடுங்க என கதறிய கணவன்!!

1224

கதறிய கணவன்

தமிழகத்தில் 36 வயது பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் சென்றுவிட்டதால், மனைவியை மீட்டுத் தரும்படி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தருமபுரி மாவட்டம், எர்ரனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஐஸ் வியாபாரியான இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், தமிழ்செல்வி என்ற ஒரு மகளும் உள்ளனர். தமிழ்செல்வி அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தமிழ்செல்விக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர் நாகராஜுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முருகம்மாவுக்கு நாகராஜ் சித்தி முறை வேண்டும் என கூறப்படுகிறது. 19 வயதான நாகராஜ் , மாரியப்பன் ஐஸ் வியாபாராத்துக்காக வெளியில் செல்லும்போது முருகம்மாள் வீட்டுக்கு வந்து அவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அறிந்த மாரியப்பன் இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் முருகம்மாவும், நாகராஜும் வீட்டில் இருந்த 13 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு, ஊரைவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த மாரியப்பன் நேற்று மகள் தமிழ்செல்வியுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தார். முதலில் தன் உடலில் மண்எண்ணை ஊற்றிய அவர், அதன் பிறகு மகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார். அதன் பின் மகளுக்கு தீவைத்துவிட்டு, தானும் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார், உடனடியாக 2 பேரையும் காப்பாற்றினர்.

இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், என் மனைவி மகன் முறையுள்ள 19 வயசு பையனுடன் ஓடிவிட்டார். அப்போது வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.

எனது மனைவியை பொலிசார் கண்டுபிடித்து தரவேண்டும் என்றும், உச்சநிதிமன்றம் கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று தீர்ப்பு வந்துவிட்டது. இந்த தீர்ப்பால நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.