189 பயணிகளுடன் கடலில் விழுந்த விமானத்தில் உயிரிழந்த வருங்கால கணவன் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காதலியின் செயல்!!

1001

காதலியின் செயல்

இந்ததோனேசியாவில் ஜாவா கடலில் 189 பயணிகளுடன் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த தனது வருங்கால கணவன் இறந்துவிட்டதால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் மணமகள் போல உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் மணமகள் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி உலக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த இண்டன் சீரி என்ற மருத்துவருக்கும், ரியோ நந்தா என்ற பெண்மணிக்கும் நவம்பர் 11 ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான ஆடைகள் அனைத்து தயார் செய்யப்பட்டுவிட்டது, மேலும் வருங்கால ஜோடிகளான இவர்கள், தங்களது எதிர்காலம் குறித்து ஆசையாக வாட்ஸ் ஆப் வாயிலாக உரையாடிக்கொண்டனர்.

மருத்துவரான ரியோ நந்தா 3 நாள்கள் பயிற்சிக்காக ஜகார்த்தா சென்றிருந்தார். தனது பயிற்சியை முடித்துக்கொண்டு லயன் ஏர் விமானத்தில் திரும்பியபோதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஜகார்த்தாவில் இருந்த ரியோ தனது வருங்கால மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், `நான் நவம்பர் 11-ம் தேதி வரவில்லை என்றால் நான் உனக்காகத் தேர்ந்தெடுத்த ஆடையை உடுத்தி உன் கூந்தலில் வெள்ளை ரோஜா மலர் சூடி அந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பு’ எனத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டாக இவர் அனுப்பிய இந்த குறுஞ்செய்தி இவர்களது வாழ்க்கையில் உண்மையாகியுள்ளது. காதலன் கூறியதுபோலவே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண நாள் வந்தது. ரியோவின் ஆசைப்படி, அவர் எடுத்துக்கொடுத்த ஆடையை உடுத்தி கூந்தலில் வெள்ளை ரோஜா மலர் சூடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காலங்கள் கடந்தாலும் உங்கள் மீதான என் காதல் மட்டும் குறையாது’ எனப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி உலக மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.