19 வயது அவுஸ்திரேலிய பெண்ணுடன் இந்திய மாணவனுக்கு ஏற்பட்ட நட்பு: கொலையில் முடிந்த சம்பவம்

602

அவுஸ்திரேலியாவில் படித்து வந்த இந்திய மாணவன் டேட்டிங் ஆப் மூலம் அந்நாட்டு பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக உயிரிழந்துள்ளான்.

மௌலின் ரத்தோட் என்ற மாணவன் அவுஸ்திரேலியாவில் படித்து வந்துள்ளான். இவன் கடந்த திங்கட்கிழமை இறந்துவிட்டதாக இவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் மகனின் மரணத்தில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவனது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவு துறை அமைச்சரின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சம்பவம் குறித்து தற்போது வெளியாகியுள்ளன. 19 வயது பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் மௌலின் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார்.

நான் உன்னை பார்க்கவேண்டும் எனக்கூறி வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். சிறிது நேரத்தில், மெளலின் வீட்டில் படுகாயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டார்.

இன்று அப்பெண் அவுஸ்திரேலிய பொலிசால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எதற்காக மெளலினைத் தாக்கினார்? அன்று அங்கு நடந்தது என்ன? என்பது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தில் அவர் பதில்சொல்லவில்லை, எனவே அவரின் காவல் நீட்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.