2 வயது குழந்தையை தூக்கி தரையில் வீசிய கொடூர தந்தை: அதிர்ச்சியடைந்த தாய்!!

1063

தமிழகத்தில் இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், அவந்திகா என்ற 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

வேல்முருகனுக்கு குடிக்கும் பழக்கம் உள்ளதால், நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டிற்கு சென்ற அவர் மனைவியான அமுதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவர்களின் வாக்குவாதம் முற்றியுள்ளதால், ஆத்திரமடைந்த வேல்முருகன் அவந்திகாவை தூக்கி தரையில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமுதா உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் தலைமறைவாக உள்ள வேல்முருகனை தேடி வருகின்றனர்.