பிரபஞ்ச அழகி

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றும், தனது சொந்த நாட்டில் விமர்சனங்களுக்குள்ளானதால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

2018ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Catriona Gray (24) திளைக்க, அவரது சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

அவரது சொந்த நாட்டினரே அவருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்து, பிலிப்பைன்ஸ் பெற்றோருக்கு பிறந்த Catriona, மிகவும் வெள்ளையாக இருப்பதுதான் பிரச்சினை. பிலிப்பைன்ஸ் அழகி என்று கூறப்படுவதற்கேற்ற நிறம் Catrionaவுக்கு இல்லை என்று அவரது சொந்த நாட்டினரே கருதுகின்றனர்.

அவர் மேற்கத்திய பெண் போல் காணப்படுவதாலேயே அழகிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாகவும், இது மேற்கத்திய அழகே சிறந்தது என்னும் கருத்தை மெய்ப்பிப்பது போல் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

Catriona போதுமான அளவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர் போல் இல்லை என்று தெரிவிக்கும் ஒருவர், அவர் வெள்ளைக்காரப் பெண் ஒருவர் சற்று நிறம் மங்கியிருப்பதுபோலவே தோற்றமளிப்பதாகக் கூறுகிறார்.

இந்த அழகிப்போட்டிகள், வெள்ளைக்காரர்கள்தான் அழகிற்கான இலக்கணம் என்பதையே வலியுறுத்துகின்றன என்கிறார் அவர்.