10 ஆண்டுகள்.. 8 ஆயிரம் கருக்கலைப்பு : சொகுசு பங்களாவில் வசூல் வேட்டை நடத்திய தம்பதியினர்!!

346

வசூல் வேட்டை நடத்திய தம்பதியினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதியினரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனந்தி என்பவர் சொகுசு பங்களாவை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார் மற்றும் சுகாதாரத்துறையினர் சோதனை செய்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கருக்கலைப்பு செய்ய வருவோரை மறைவாக வைத்திருக்க ஏதுவாக சிறிய அளவிலான அறைகளை உருவாக்கியுள்ளனர். குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்வதற்காக 6 ஆயிரம் ரூபாய் வாங்குவதும், கருக்கலைப்பு செய்வதற்கு அவரவர் வசதிக்கு ஏற்றார் போல 20 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை வசூலிப்பதும் தெரியவந்தது.

இதற்காக பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் இருப்பதும், அவர்கள் கமிஷனை பெற்றுக் கொண்டு இங்கு வாடிக்கையாளர்களை அழைத்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசுக்களை கருவிலேயே இவர்கள் அழித்துள்ளனர்.

ப்ளஸ் 2 முடித்த பிறகு டிப்ளமோ நர்சிங் முடித்த ஆனந்தி ஸ்கேன் சென்டர் தொடங்கி இதுபோல் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உடந்தையாக கணவர் தமிழ்செல்வன், வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு உதவியாக ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர்கள் மீண்டும் இதுபோன்ற கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.