பல ஆண்களால் நடந்த கொடூரம் : 2 ஆண்டுகளாக தந்தையால் அனுபவித்த கொடுமை : 16 வயது மகளின் வாக்குமூலம்!!

431

பல ஆண்களால் நடந்த கொடூரம்

கேரளா மாநிலத்தில் நவம்பர் 19 ஆம் திகதி ஹோட்டல் அறையில் வைத்து 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடத்தப்பட்ட விசாரணையில் தந்தையும் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சந்திப் என்ற நபர், குறித்த சிறுமியின் அண்ணனுக்கு போன் செய்து, உனது தங்கையின் வீடியோ எங்களிடம் இருக்கிறது என்று கூறி குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துள்ளார். சென்ற இடத்தில், சிறுமியை, சந்தீப் உட்பட ஆண்கள் பலர் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை காட்டி, பணம் கேட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு சென்ற சிறுமயின் அண்ணன், நடந்தவற்றை தனது தாயிடம் விளக்கியுள்ளார். பின்னர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை செய்ததில், அவர் சொன்ன தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது தந்தை இரண்டு ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தனது தாய் மற்றும் அண்ணனிடம் கூறியுள்ளார். இதனால், நவம்பர் 19 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்கும், தனது தந்தைக்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகமடைந்த அண்ணன், இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு, எனக்கும் நவம்பவர் 19 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார்.

பின்னர், நடந்தவை குறித்து மகளிர் பொலிசில் தாய் புகார் அளித்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் சந்தீப் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.