நகங்களின் நிறத்தை வைத்து நம் உடல் நலம் எப்படி உள்ளது என்பதை அறிவது இப்படித் தான் !

631

நம் உடல் நலம் எப்படி உள்ளது என்பதை நகங்களின் நிறத்தை வைத்து நம்மால் கண்டுபிடிக்க முடியும்.ஆகவே உங்கள் நகங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் இது! நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதற்காக அறிகுறிகள் இதோ.

நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால் நம் ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறது என்று அர்த்தம் . சயனோஸி எனும் நோயின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம்.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். தைராய்டு பிரட்சனை இருப்பவர்களுக்கும் நகம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் கோடுகள் நகத்தில் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பிடிப்பதால் அதில் உள்ள நிக்கோடின் கறை படிவதால் இருக்கலாம்.நுரையீரல், இருதய நோய் நோய் உள்ளவர்களின் நகங்கள் பருத்து, குவிந்து, பளபளவென்று இருக்கும்.சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறி இருந்தால் நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிரும்.

வெளிரிய மற்றும் மெல்லிய நகங்களை உடையவர்களுக்கு இரத்த சோகை உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறியோடு சோர்வும் சேர்ந்து வந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.நகத்தில் மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்.உங்கள் நகங்களில் கருமையான பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால், அது மெலனோமாவிற்கான (சரும புற்று நோய்) அறிகுறியாகும்