கொழும்பு மைதான கண்ணாடியை உடைத்த வீரர் இவர்தான் : சமையல்காரர் தகவல்!!

632

இலங்கை- வங்கதேச போட்டியின் போது வீரர்கள் ஓய்வறை கண்ணாடியை உடைத்தது வங்கதேச அணித் தலைவர் ஷகிப் உல் ஹசன் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கை- வங்கதேச அணிகள் மோதின.

இப்போட்டியின் கடைசி நேரத்தில் வீசப்பட்ட நோ பால்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதன் காரணமாக மைதானத்துக்குள் இரு அணி வீரர்கள் இடையே மோதல் உருவாகும் சூழல் உண்டானது.

அதே சமயத்தில் வங்கதேச அணித் தலைவர் ஷகிப் உல் ஹசன் தனது அணி வீரர்களை வந்து விடுமாறு ஆக்ரோஷத்துடன் கோபமாக கத்தினார்.

இந்த சமயத்தில் வங்கதேச அணி வீரர்களின் ஓய்வறை கதவு கண்ணாடி சுக்குநூறாக உடைக்கப்பட்டது.

இதை செய்தது யார் என தெரியாத நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய நடுவர்கள் முடிவெடுத்தனர்.

ஆனால் சிசிடிவி காட்சிகள் குறித்து விளக்கம் இன்னும் தரப்படவில்லை, ஆனால் அந்த அறையில் இருந்த சமையல்காரர்கள், ஷகிப் உல் ஹசன் தான் கண்ணாடியை உடைத்தார் என நடுவர் கிறிஸ் பிராடிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷகிப் கண்ணாடி கதவை வேகமாக தள்ளியதை பார்த்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே ஷகிப் நடந்து கொண்ட விதத்துக்கு அவருக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீத அபராதமும், குறைபாடு புள்ளியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.