இரண்டாம் கணவர் குறித்து பேச மறுத்த கௌசல்யா

736

பேச மறுத்த கௌசல்யா

என் மீதான விமர்சனங்கள் குறித்து எதையும் நான் பேசவிரும்பவில்லை, நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்கவேண்டாம் என கௌசல்யா கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் – பழநி கவுசல்யா ஆகிய இருவரும் காதலித்து 2015-ல்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டையில் சங்கர் கடந்த 2016 மார்ச் 31-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, தீண்டாமை, ஆணவப் படுகொலைக்கு எதிராக கவுசல்யா போராடி வந்தார்.

இந்த நிலையில், கோவையில் ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா காதலித்து கடந்த டிசம்பர் 9-ம் தேதி மறுமணம் செய்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, வேறொரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றியது உட்பட சக்தி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், சக்திக்கு பல பெண்களுடன் தொடர்பு மற்றும் பெண்களை ஏமாற்றுபவர் என புகார்கள் எழுந்ததையடுத்து, இதுகுறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

ஒரு பெண்ணைக் காதலித்து கைவிட்டதை சக்தி ஒப்புக்கொண்டார், இதனைத்தொடர்ந்து ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் அவர் பறை இசைக்கக் கூடாது” என்று தெரிவித்தனர்.

இது பலத்த சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. ஆனால், கௌசல்யா இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார். இதுகுறித்துப் பேச நான் விரும்பவில்லை. பிம்பமாக என்னை நினைத்து என் பின்னால் நின்றிருந்தால், நிச்சயம் வேண்டாம். ஆணவக் கொலைக்கு எதிராக, சாதி ஒழிப்புக்காக நிற்பேன். அதற்குத் துணை நிற்பவர்கள் இருந்தால் போதும்.

பிற்காலத்தில் எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றினால் விளக்கம் சொல்வேன். எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.