52 வயதில் 16வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய் : எச்சரிக்கும் மகள்!!

164

எச்சரிக்கும் மகள்

பிரித்தானியாவைச் சேர்ந்த வாடகை தாய் தன்னுடைய 52 வயதிலும் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், பலரும் இது ஆபத்தான முடிவு என்று கூறி வருகின்றனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Carole Horlock. 52 வயதான இவர் இது வரை 15 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அதில் இவருக்கு இரண்டு சொந்த குழந்தைகள், மற்ற 13 மூன்று வேறொரு தம்பதிக்கு பெற்றெடுத்து கொடுத்துள்ளார். இதில் இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன.

இந்நிலையில் இவர் 14-வது குழந்தை (மொத்தம் 16 குழந்தைகள்) ஒன்றை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் குட்மார்னிங் பிரிட்டன் என்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

ஆனால் இது அவருடைய மகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் வயது அதிகரித்து செல்கிறது. இதற்கு மேலும் குழந்தை பெற்றெடுத்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இதே போன்று மருத்துவர்களும் இந்த வயதிற்கு மேல் குழந்தை என்பது சற்று ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கர்ப்பமாவதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா என்று கேட்ட போது, அவரோ இல்லை இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன், அனுபவிக்கிறேன் உண்மையாக சொல்லப்போனால் நான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவருடைய மகள் மேகன் கூறுகையில், அவர் தொடர்ந்து கர்ப்பமாவது எனக்கு பிடிக்கவில்லை, இவர் எனக்கு ஒரு அம்மா மட்டுமில்லை, நல்ல ஒரு நண்பர், அவர் எந்த ஒரு ரிஸ்கையும் நான் எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இணையவாசிர்கள் பலரும் இது ஒரு ஆபத்தான முடிவு என்று கூற, ஒரு சிலர் கர்ப்பம் என்பது நமக்கு கடவுள் கொடுத்த வரம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Carole Horlock-வோ என்னுடைய உடல்நிலை நன்றாகவே இருக்கிறது . எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். இப்படி குழந்தை பெற்றெடுத்த போது Carole Horlock அறுவை சிகிச்சைகள் எல்லாம் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.