நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் வரம்புமீறிய இளைஞர் : நேர்ந்த விபரீத சம்பவம்!!

147

விபரீத சம்பவம்

இந்தியாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பிசால்பூர் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் அங்குள்ள பண்ணையில் சடலமாக கிடந்தார்.
பிரேத பரிசோதனையில் லோகேஷ் சுட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் லோகேஷின் நண்பர்கள் ஷிவம் ஷுக்லா (18) மற்றும் மோஹலா ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், ஷுக்லாவுக்கு, இளம் பெண் ஒருவருடன் திருமண நிச்சயம் ஆன நிலையில் விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

இதையடுத்து அந்த பெண்ணுடன் அடிக்கடி அவர் போனில் பேசி வந்தார். அப்போது ஷுக்லாவுடன் இருந்த அவர் நண்பர் லோகேஷ் அந்த பெண்ணின் போன் நம்பரை நைசாக வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த நம்பருக்கு போன் செய்து அந்த பெண்ணிடம் வரம்பு மீறி பேசி வந்துள்ளார். இது குறித்து அப்பெண் ஷுக்லாவிடம் கூறிய நிலையில் லோகேஷிடம் அவர் தட்டி கேட்டார். ஆனால் அவர் பேச்சை லோகேஷ் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஷுக்லா தனது நண்பர்கள் மோஹலா, குணால் ஆகியோருடன் சேர்ந்து லோகேஷை தீர்த்து கட்ட முடிவு செய்து அவரை தனியாக அழைத்து சென்று சுட்டு கொன்றுள்ளதாக கூறியுள்ளனர்.

தற்போது இவ்வழக்கில் ஷுக்லா மற்றும் மோஹலாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள குணாலை தேடி வருகிறார்கள்.