சிறுமியை கர்ப்பிணியாக்கி குழந்தையை பட்டினி போட்டு கொன்ற இளைஞர்!!

210

சிறுமிய கர்ப்பிணி

அமெரிக்காவில் சிறுமியை கர்ப்பிணியாக்கி பிறந்த குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டார்வின் ரெட் கிளவுட் என்ற 26 வயது இளைஞர் கடந்த 2014ம் ஆண்டு, பெயர் வெளியிடப்படாத சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். அதன் மூலம் பிறந்த தனது இரண்டு மாத குழந்தையான டால்டனை சரியாக பராமரிக்காமல் பட்டினி போட்டுள்ளார்.

இதனால் உடலுடன் எலும்புகள் ஒட்டி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது இன்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அப்போது டார்வின், தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

“நான் செய்த தவறுக்காக மனம் வருந்துகிறேன். நான் தவறுகள் செய்த ஒரு மனிதன் தான். “நான் புத்திசாலி இல்லை. ஆனால் நன்றாக வளர்ந்திருக்க முடியும் என்று எனக்கு தெரியும். அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள்” எனக்கூறினான்.

இதனை கேட்டறிந்த தலைமை நீதிபதி ஜெஃப்ரி எல் விக்கன், மிகவும் அசாதாரணமாக இருந்ததன் காரணத்தினாலே இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டதாக கூறி குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .

பின்னர் இதுகுறித்து பேசிய டார்வின் உறவினர், இந்த சம்பவத்தில் டார்வினுக்கு மட்டும் சம்மந்தமில்லை. இருவருக்குமே சம்மந்தம் உண்டு. நல்லவேளை 21 ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் டார்வின் வீடு திரும்பிவிடுவான் என தெரிவித்துள்ளார்.