வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து இளம்பெண்ணை மணந்த இளைஞர் : சில நாட்களில் நடந்த சம்பவம்!!

334

தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம்

இந்தியாவில், கடந்த வாரம் திருமணமான புதுப்பெண் சினிமா தியேட்டரில் இருந்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் லாய்ட் மொண்டீரோ, இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சொந்த மாநிலத்தை சேர்ந்த ஜேன் டீகூருஸ் (28) என்ற பெண்ணுடன் லாயட்டுக்கு கடந்தாண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து சொந்த ஊருக்கு சமீபத்தில் லாய்ட் வந்த நிலையில் கடந்த 31ஆம் திகதி ஜேனுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று புதுமனைவியுடன் சினிமா தியேட்டருக்கு லாய்ட் படம் பார்க்க சென்றார்.

அப்போது இடைவெளியில் ஜேன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த லாய்ட் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் ஜேனை தேடி வருகிறார்கள்.