இரு வேறு தந்தைகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் : அதிசய சம்பவம்!!

725

இரட்டைக் குழந்தைகள்

செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் இரு வேறு தந்தைகளுக்கு, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த சைமன் மற்றும் கிரேம் பெர்னே-எட்வர்ட்ஸ் என்கிற ஓரினசேர்க்கையாளர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி இணையதளத்தில் தேடும் பொழுது கணவரை பிரிந்து மகன்களுடன் வசித்து வரும், 32 வயதான கனடா நாட்டு மெக் ஸ்டோனை சந்தித்தனர்.

அவருக்கு £25,000 பவுண்டுகள் செலுத்திய பின்னர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை நடைபெறுவதற்கு முன்பு வரை, யாருடைய விந்தணுவை கொடுக்கலாம் என இருவரும் குழம்பி போய் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த மருத்துவர், இருவருடைய விந்தணுக்களிலும் பாதியை வாங்கிக்கொண்டு மெக் ஸ்டோன் கருப்பையில் செலுத்தினர். 33 வார கர்ப்பிணியாக இருந்த போது, மெக் ஸ்டோனிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஒரு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதில் கிரெம், கால்டெரின் தந்தையாகவும், சைமன் அலெக்ஸாண்ட்ராவுக்கு தந்தையாகவும் இருக்கிறார். இதுகுறித்து பேசிய சைமன், மெக் அருமையான ஒரு வேலையினை செய்துள்ளார். நாங்கள் இருவரும் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாக மாறியதன் மூலம் எங்களுடைய கனவு நிறைவடைந்துள்ளது .

முதலில் நாங்கள் மெக் ஸ்டோனை சந்திக்க சென்றபோது, சிறிது தயங்கினோம். ஆனால் அவள் எங்களை பார்த்ததும் கட்டியணைத்து, அவருடைய குழந்தைகளை எங்களிடம் அறிமுகம் செய்து வைத்தாள். பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு சகோதரி போலவே மெக் எங்களுக்கு தெரிந்தாள் என கூறியுள்ளார்.