வெளிநாட்டில் தமிழருக்கு மரணதண்டனை : போராடி மீட்ட மனைவியின் கண்ணீர் வீடியோ!!

642

போராடி மீட்ட மனைவி

குவைத்தில் தனது கணவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து போராடி மீட்டுள்ளார் மனைவி. தஞ்சையைச் சேர்ந்தவர். அர்ஜுன் ஆத்திமுத்து என்பவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவர், 2013 ஆம் ஆண்டு அப்துல் வாஜித் என்ற சக ஊழியரை கொலை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக அர்ஜுனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கணவர் சிறையில் இருந்த காரணத்தால் அவரது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் வறுமையிலும், துயரத்திலும் இருந்துள்ளனர். அதோடு, கணவரை மீட்க வேண்டும் என முடிவு செய்தார். அப்துல் வாஜித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து தன் கணவரை உயிரை மீட்க உதவும்படி கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார். அப்துல் வாஜிப்பின் குடும்பத்தினரும் வறுமையின் பிடியில்தான் இருந்தனர்.

தங்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதி அளித்தால் மாலதியின் கணவரை மன்னிக்கும்படி குவைத் அரசுக்குக் கடிதம் அளிப்பதாகக் கூறியுள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்த மாலதியால் பணம் கொடுக்க இயலவில்லை. இதனைத்தொடர்ந்து நிதி திரட்டி கடந்த 2017-ம் ஆண்டு அப்துல்வாஜிக்கின் குடும்பத்தினரிடம் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

அப்துல் வாஜிப்பின் குடும்பத்தினர் கொலை செய்த அர்ஜுன் ஆத்திமுத்துவை மன்னித்து விட்டதாக குவைத் அரசைக் கடிதம் வழியாகக் கேட்டுக்கொண்டனர்.

குவைத் தூதரகம் வழியாகக் கடிதம் குவைத் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அர்ஜுன் ஆத்திமுத்துவின் மரண தண்டனை தற்போது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. தனக்கு உதவியர்களுக்கு நன்றி தெரிவித்து மாலதி கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.