இந்த முறையிலேயே நடராஜன் இறுதிச்சடங்குகள் நடக்கும்: சசிகலா சகோதரர் தகவல்!!

1599

நடராஜன் உடலுக்கு திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அடக்கம் செய்யப்பட உள்ளதாக திவாகரன் கூறியுள்ளார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.

நடராஜனின் உடல் நேற்றிரவு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் நேற்று கார் மூலம் தஞ்சைக்கு வந்தடைந்தார்.

இறுதிச்சடங்குகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா சகோதரர் திவாகரன், குடும்ப பாரம்பரிய முறைப்படி நடராஜன் உடல் எரியூட்டப்படாது.

திராவிட இயக்க பாரம்பரிய முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது ஆசைப்படியே முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார்.