சிகிச்சைக்கு வரும் வாலிபர்களை மயக்கிய செவிலியர் : முன்னாள் காதலனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

1051

வெளிச்சத்திற்கு வந்த உண்மை

கன்னியாகுமரியில் வேலை செய்து வரும் செவிலியர், சிகிச்சைக்கு வந்த வாலிபரை மயக்கி பணம், பொருட்களை பறித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பொழுது அங்கு வேலை செய்து வந்த செவிலியருக்கும், இளைஞருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு வெளியில் சென்றதுடன், நெருக்கமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் இளைஞரின் வீட்டிற்கு தெரியவரவே, திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அந்த பெண் திடீரென இளைஞரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். போன் செய்யும் போதெல்லாம் பிசி, சுவிட்ச் ஆப் என வரத்துவங்கியுள்ளது. இதனால் இளைஞர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக, கழுத்தில் தாலியுடன் இருப்பதை போன்ற புகைப்படத்தினை அந்த செவிலியர் இளைஞரின் மொபைலுக்கு அனுப்பியுள்ளார். அதோடு சேர்ந்து, அந்த நபருடன் இருக்கும் சில அந்தரங்க படங்களையும் அனுப்பி, நான் இவரை தான் திருமணம் செய்துகொண்டேன் எனவும், இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு நீ என்னுடைய நெருக்கமாக இருந்த படங்கள் என்னிடம் உள்ளன எனத்தெரிவித்துள்ளார்.

இதனால் பயந்து போன அந்த பெண், கணவரிடம் நடந்தவை பற்றி கூறிவிட்டு பொலிஸில் புகார் அளித்துள்ளார். உடனே அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், தன்னிடம் இருந்த ஏராளமான பணத்தையும், பொருளையும் பெண் பெற்றிருப்பதாக இளைஞர் கூறியுள்ளார்.

பின்னர் இருவரையும் அழைத்த பொலிஸார் செல்போன்களில் இருந்த புகைப்படங்களை அழித்துவிட்டு, இனிமேல் எந்த புகைப்படங்களும் வெளியில் வரக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளனர். தற்போது அந்த பெண் திருமணம் செய்திருக்கும் நபரும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.