கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

424

கணவரை கொன்ற மனைவி

கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் கைதான பெண் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சிவசேனா துணை தலைவராக இருந்தவர் சைலேஷ். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் திகதி கணேஷ்புரி கிராம பகுதியில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

பொலிசார் நடத்திய விசாரணையில், சைலேஷ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அவரது மனைவி சாக்சி கண்டுப்பிடித்த நிலையில் ஆத்திரத்தில் கூலிப்படையினரை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் சாக்சி மற்றும் கூலிப்படையினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சாக்சி கல்யாண் ஆதார்வாடி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று முன்தினம் ஜெயில் கழிவறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. பின்னர் ஜெயில் ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சாக்சி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.

உடனடியாக சாக்சி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் கூறினர். இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கணவரை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் இருந்ததால் சாக்சி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.