இந்த விதைகளை மட்டும் தூக்கி வீசிடாதீங்க.. இந்த நோய் எல்லாம் பறந்து ஓடிவிடுமாம்!

804

கோடைகாலங்களில் மட்டும் அதிகமானோர் விரும்பி உண்ணும் பழத்தில் தர்பூசணிக்கே முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது.

இது நீர் அதிகமாகக் கொண்ட, வெள்ளரி இனத்தைச் சேர்ந்த காய் ஆகும். இதனை ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் (watermelon) என்றழைக்கப்படுகின்றது.

இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை இது தடுக்கிறது.பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரை இந்த பழத்தினை விரும்பி உண்ணுவர்.

அந்தவகையில் தர்பூசணியின் விதைகளில் அதிகம் மருத்துவகுணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. உண்மையில் தர்பூசணி விதைகளை தூக்கி ஏறிவதை விட வறுத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ அந்த நீரைக் குடித்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

இந்த விதைகள் நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. தற்போது இவை என்ன என்பதை பார்ப்போம்.

ஒரு கையளவு தர்பூசணி விதையை எடுத்துக் கொண்டு அதை 1 லிட்டர் நீரில் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி குளிரவைத்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், ரத்த சர்க்கரையின் அளவு குறைவதோடு, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாகக் குடித்து வர வேண்டும்.
தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு பொடுகு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தர்பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளதால் இது நம்முடைய சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

தர்பூசணி விதையை உலர வைத்து, வறுத்து பொடி செய்து டீ போட்டு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த விதைகளின் பொடியை சாலட், டீ ஆகியவற்றில் போட்டு குடிக்கலாம். சூப்களிலும் தூவி சாப்பிடலாம்.

தர்பூசணி விதையில் உள்ள லைசின் போன்ற அமினோ அமிலங்கள் வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள் மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துகிறது.

தர்பூசணி விதைகளில் அதிக அளவில் உள்ள வைட்டமின் B காம்ப்ளக்ஸ், நியாசின், ஃபோலேட், தயமின், வைட்டமின் B6 போன்றவை ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளன. இது நம்முடைய நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது.