50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள் : தடைப்பட்ட மகளின் திருமணம் : போராடும் குடும்பம்!!

563

50 கிலோ அளவுக்கு வீங்கிய கால்கள்

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் கால்கள் 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளதால் அவரால் நடக்க முடியாமல் போயுள்ளது. சிந்த் மாகாணத்தின் நவ்ஷஹிரோ ஃபெரோஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாகித் ஹுசைன். 38 வயதான இவரது கால்கள் தற்போது 50 கிலோ அளவுக்கு வீங்கியுள்ளது.

5 பிள்ளைகளின் தந்தையான ஹுசைன் தற்போது கிராம மக்களின் நிதி உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சுயமாகவே நடக்க முடியாது என்பதால் நாளின் பெரும்பாலான நேரம் படுக்கையிலேயே உள்ளார். இதனால் ஒருகட்டத்தில் படுத்த படுக்கையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று வீக்கம் கண்டதாக கூறும் ஹுசைன், அது நாளடைவில் குணமாகும் என கருதியுள்ளார். ஆனால் அது நாளடைவில் வீக்கம் அதிகமாகவே, தற்போது எழுந்து நடக்கவே முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான சிகிச்சைக்காக இதுவரை சேமித்த பணம் மொத்தமும் செலவிட்டதாக கூறும் ஹுசைன், தற்போது குடும்பத்தாரின் உதவியுடனே வாழ்க்கையை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

தமக்கு ஏற்பட்ட இந்த நோய் காரணமாக மகள்களின் திருமணம் தடைபட்டுள்ளதாகவும், சேமித்த பணம் மொத்தமும் சிகிச்சைக்காக செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் உள்ள பல மருத்துவர்களை இதுவரை சந்தித்துள்ள ஹுசைன், அவர்கள் அனைவரும் ஒரே குரலாக குணப்படுத்தும் கட்டத்தை தாண்டியதாகவே கூறியுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்துள்ளார் ஹுசைனின் மனைவி ஃபாத்திமா.