அன்று வீட்டை விட்டு ஓடி வந்து பாலியல் தொழிலாளியாக மாறிய திருநங்கை : இன்று அவரது நிலை!

740

திருநங்கை

தமிழகத்தில் அன்று பாலியல் தொழில் செய்து வந்த திருநங்கை இன்று அதிலிருந்து மீண்டு தன்னுடைய சமூகத்திற்கு போராடி வருகிறார். நாமக்கல் மாவட்டம் அருணகிரி சுள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணா. பள்ளியில் படித்து கொண்டிருந்த இவருக்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, தன் உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்துள்ளார்.

ஆனால் அப்போது இதற்கான மாற்றம் குறித்து அவருக்கு சரியாக தெரியவில்லை. இவரின் நடிவடிக்கையை பார்த்து அவரது பெற்றோர் திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளியில் பலரும் இவரை சீண்டியுள்ளனர். பத்தாவது முடித்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் மார்க் பெற்ற போதும் பலரின் கேலி, கிண்டல்களால், அவரால் படிப்பை தொடர முடியவில்லை.

இதனால் 1987-ஆம் ஆண்டு சென்னைக்கு ஓடி வந்த இவர், அங்கு இவர் சமூகத்துடன் சேர்ந்து கொண்டார். முதலில் கடைகளில் ஏறி காசு வாங்கிய இவர், அதன் பின் ஒரு வருடம் கழித்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதன் பின் தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்காக பாலியல் தொழிலில் இறங்கியுள்ளார். அப்போது இதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதால், இந்த தொழிலில் இறங்கியுள்ளார்.

அப்போது பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களை அனுபவித்துள்ள இவர், நாள் ஒன்றிற்கு இத்தனை பேர் தான் என்று கணக்கில்லாமல் வாழ்ந்து வந்துள்ளார். வலி ஏற்படும் போது, மாத்திரைகள் கூட போட நேரமில்லாம தவித்து வந்துள்ளார்.

இப்படி இவரின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது, 1989-ல் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, நான்கைந்து பேர் இவரை அழைத்து பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளனர்.

ஆனால் இவர் வர மறுத்ததால், அவர்கள் அருணாவை சர்மாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின் அவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்தச் சம்பவத்தின் காரணமாகத்தான், தன் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இப்போது எல்லாம் திருநங்கைக்கு பிரச்சனை என்றால் 200 பேர் வருகிறார்கள். அப்போது இது எல்லாம் கிடையாது. நான் அடைந்த கஷ்டத்திற்கு பின் 1998-ல் மகாராஷ்ட்ராவில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர களப்பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன்.

தேவதாசி பெண்களுடைய உரிமைக்காக அவங்களுடைய மறுவாழ்வுக்காக வேலை பார்த்தேன். அப்படியே படிப்படியா பதவி உயர்வு பெற்று ஆலோசகரா அதே நிறுவனத்தில் வேலை பார்த்தேன். 2002-ல் மீண்டும் தமிழகத்துக்கு வந்தேன்.

இங்கே திருநங்கைகள் உரிமைக்காக ஓர் அமைப்பைத் தொடங்கினேன். தமிழ்நாடு முழுக்க பாலியல் தொழில் செய்கிற பெண்கள், திருநங்கைகள் இவர்களுக்கான நோய் தடுப்பு விழிப்பு உணர்வு பணியையும், அவங்களுடைய உரிமைகள் மற்றும் மறுவாழ்வுக்காகவும் வேலை பார்த்தேன்.

2012-க்குப் பிறகு தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரா இன்று வரை வேலை பார்த்து கொண்டிருக்கிறேன், திருநங்கைகள் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி முடித்துள்ளார்.