24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துபோன தாய் – மகன் : சோக சம்பவம்!!

907

ஒடிசாவில் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வந்த பார்வதி (வயது 78) என்பவர் கடந்த திங்கட்கிழமை வயது முதிர்வால் இறந்துபோனார்

இதனை தொடர்ந்து அவரது கண்களை கண் வங்கிக்கு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர்.

இந்நிலையில், அடுத்த நாள் காலை பார்வதியின் மகன் காமேஸ்வர் (47) உடல் நல குறைவால் மரணம் அடைந்துள்ளார். இதனால் இரட்டிப்பு சோகத்தில் அவரது குடும்பத்தினர் மூழ்கினர்.

எனினும் அதில் இருந்து உடனடியாக மீண்ட அவர்கள் காமேஸ்வரின் கண்களையும் நன்கொடையாக வழங்கினர்.

இதுபற்றி கஞ்சம் மாவட்டத்தில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் நாகேஸ்வர் ராவ் சுபுதி கூறும்பொழுது, இறந்தவர்களின் கார்னியாக்கள் எடுக்கப்பட்டன.

முறையான பரிசோதனைகளுக்கு பின் இவை தகுதியானவை என கண்டறியப்பட்டால், நான்கு பேருக்கு பார்வை கிடைக்க கூடும் என கூறியுள்ளார்.