பெங்களூரில்…………..
பெங்களூரில் இருந்து சசிகலா சென்னைக்கு வந்தடைந்துள்ள நிலையில் அவருக்காக பல மணி நேரம் பொறுமையுடன் கார் ஓட்டிய ஓட்டுனர் குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்குகளுக்காக சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து தமிழகத்திற்கு நேற்று புறப்பட்டார்.
அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் வழியாக சென்னை நோக்கி புறப்பட்டார் சசிகலா.
தொண்டர்களின் உற்சாக வரவேற்பினால் அவர் இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார். 24 மணி நேர கார் பயணத்துக்கு பின்னரே சசிகலா சென்னை வந்தடைந்தார்.
சென்னைக்கு வந்தவுடன் நேராக ராமாபுரம் வந்தடைந்தார் சசிகலா. அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் வீட்டுக்கு அவர் திரும்பினார்.
சசிகலா இவ்வளவு நேரம் தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே நெடுபயணம் மேற்கொண்டதற்கு பின்னால் அவர் வந்த காரின் ஓட்டுனரின் உழைப்பு பெருமளவில் உள்ளது. சசிகலாவின் காரை ஓட்டி வந்தவரின் பெயர் பிரபு ஆகும்.
இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், சசிகலாவின் உயிர் தோழியுமான ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக இருந்தவர் என தெரியவந்துள்ளது.