சீனாவில் 24 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன் தற்போது கிடைத்ததால், பெற்றோர் மகன் கிடைத்த மகிழ்ச்சியில் அவரை கட்டி அணைத்து அழுதனர்.
சீனாவின் Shaanxi மாகாணத்தை சேர்ந்தவர் Li Shunji. இவருக்கு Du Li என்ற மனைவியும் Li Lei என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் திகதி Li Lei-க்கு மூன்று வயது இருக்கும் போது காணாமல் போனார்.
அதன் பின் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத காரணத்தினால், யாரேனும் கடத்திச் சென்றிருப்பார்களோ என்று அஞ்சியுள்ளனர்.இருப்பினும் மகனை தொடர்ந்து 20 வருடங்கள் தேடிவந்த நிலையில், இவர்கள் சீனாவின் Xi’an பகுதிக்கு சென்ற போது Li Lei-ஐ போன்றே ஒருவரை பார்த்துள்ளார்.
என்ன தான் மூன்று வயதில் தொலைந்து போயிருந்தாலும், அவரின் சில நடவடிக்கைகளை பார்த்து சந்தேகப்பட்டுள்ளனர்.
ஆனால் Li Lei அங்கு இன்னொரு பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் பெற்றோர் Li Lei சாயல் இல்லாத காரணத்தினால் அங்கிருக்கும் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவர்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வீதியில் தனியாக இருந்ததால், தனியாக விட்டுவிட்டு வர மனம் வரவில்லை, அதன் காரணமாகவே எங்களுடன் அழைத்து வந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
அதன் பின் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையில் Li Lei இவர்களின் மகன் தான் என்று உறுதி செய்யப்பட்டதால், 24 வருடங்களுக்கு பின் மகன் கிடைத்த மகிழ்ச்சியில் மகனை பெற்றோர் இருவரும் கட்டி ஆரத் தழுவிய காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.