தனது சம்மதம் இல்லாமல் ஏன் என்னை பெற்றெடுத்தீர்கள் : பெற்றோரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் இளைஞர்!!

198

தனது சம்மதம் இல்லாமல் ஏன் என்னை பெற்றெடுத்தீர்கள்?

இந்தியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் என் அனுமதியில்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள் என்று பெற்றோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பையைச் சேர்ந்த ரபேல் சாமுவேல் என்ற இளைஞன் தான் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்டினாடலிசம் என்பது ஒரு சிந்தனை. அது மக்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது எனத் தூண்டும். அப்படி குழந்தைகள் பெற்றுக்கொள்வதினால் அந்தக் குழந்தைகள் பல  இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவார்கள் என கூறும் அவர், இந்த கொள்கையை தீவிரமாக பின்பற்றி வருகிறார்.

மேலும் அவர் தான் ஏன் பெற்றோர் மீது புகார் அளித்தேன் என்பது குறித்தும் பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், நான் என் பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால், தங்களின் மகிழ்ச்சிக்காக அவர்கள் என்னைப் பெற்றெடுத்திருக்கிறார்கள்.

இருவரின் சுகத்துக்காக நான் பாதிக்கப்படவேண்டுமா என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பம் இல்லாமலே பிறக்கிறார்கள். அதனால் நம் அனுமதியில்லாமல் நம்மைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு நாம் கடன்பட்டிருக்கவில்லை என கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த உலகத்தில் இருக்கும் பெற்றோரிடம் நீங்கள் போய் ஏன் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள், அவர்கள் சொல்லும் ஒரே பதில் எங்கள் தேவைக்கு நாங்கள் பெற்று கொள்கிறோம் என்பதாகவே இருக்கும்.

ஒரு குழந்தையைப் பெற்று, அதை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் தவறான ஒன்று, சமீபத்தில் வந்த ஆய்வில் கூட, பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதையே நிறுத்திவிட்டனர்.

ஏனெனில் அவர்களே இங்கு வாழ்வதற்கு கடும் பிரச்சனைகளை சந்திக்கும் போது, குழந்தையை பெற்று அந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டுமா என்பதால், அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. இப்படி பெற்றோர் மீது இது போன்ற வழக்கு தொடர்ந்துள்ளதால், அவரின் தாயாரிடம் இது குறித்து கேட்ட போது, நான் என் மகனை பாராட்டுகிறேன்.

சாமுவேல் அவரின் அனுமதி பெற்று எப்படி குழந்தை பெற்று கொள்ள முடியும் என்பதை நிரூபித்தால், நாங்கள் எங்கள் குற்றத்தை ஒப்புகொள்கிறோம், நானும், என் கணவரும் வழக்கறிஞர்கள் என்று கூறியுள்ளார்.