நடிகை சந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்புப் பகுதி என்ன ஆனது : திணறும் போலீசார்!!

733

திணறும் போலீசார்

கணவரால் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்த நிலையில் தலை உள்ளிட்ட சில பாகங்களைத் தேடி காவல் துறை களத்தில் இறங்கியுள்ளது.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் சந்தியாவை கொலை செய்த பாலகிருஷ்ணன் காவல் துறையிடம் சிக்கியுள்ளார். அவர் காவல் துறையிடம் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்.

பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21ஆம் திகதி சந்தியாவின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டாலும் 19 ஆம் திகதியே பாலகிருஷ்ணன் அவரை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட சந்தியாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. விவாகரத்து பதிவு செய்த பிறகு சென்னையில் தனித் தனியாகவே பாலகிருஷ்ணனும் சந்தியாவும் வசித்து வந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊரான தூத்துக்குடி சென்று வந்த சந்தியாவை, ‘உனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தருகிறேன், என் வீட்டிற்கு வா’ என்று கூறி அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். சினிமா ஆசையால் ஜனவரி 19 ஆம் திகதி ஜாபர்கான்பேட்டையில் பாலகிருஷ்ணன் வசித்த வீட்டிற்கு சென்றுள்ளார் சந்தியா.

அப்போது, சினிமா வாய்ப்பு வாங்கித் தருகிறேன் ஆனால் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியுள்ளார் பாலகிருஷ்ணன். இதனை ஏற்க மறுத்த சந்தியா வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை வெளியே செல்ல விடாமல் இழுத்துப் பிடித்த பாலகிருஷ்ணன் வாக்குவாதம் செய்ய அதுவே சண்டையாக மாறியுள்ளது.

அந்த சண்டையின்போது, ஆத்திரத்தில் சுத்தியை எடுத்து சந்தியாவின் மண்டையில் ஓங்கி அடிக்க அங்கேயே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், விடிய விடிய 19 ஆம் திகதி முழுவதும் மனைவியின் சடலத்துடனே இருந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்னர் பொலிசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்று யோசித்திருக்கிறார்.

இதையடுத்து சந்தியாவின் உடலை, குளியலறைக்கு எடுத்துச் சென்று மரம் வெட்டும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர் வெட்டிய உடலின் பாகங்களை ஒரே இடத்தில் வீசினால், அடையாளம் தெரிந்துவிடும் என்பதால், வெவ்வேறு மூட்டைகளாக கட்டி, பல்வேறு இடங்களில் வீசியிருக்கிறார். அதன்படி பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட சந்தியாவின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட பொலிசாரின் அடுத்தடுத்த விசாரணையில் பாலகிருஷ்ணன் சிக்கியுள்ளார்.

சந்தியாவின் கை, கால்கள் பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்த நிலையில் பாலகிருஷ்ணன் கூடவே வந்து அடையாளம் காட்டியதை அடுத்து ஈக்காடுதாங்கல் – அடையாறு பாலம் அருகே சந்தியாவின் இடுப்பில் இருந்து முழங்கால் பகுதி வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தியாவின் இடது கை, தலை மற்றும் கழுத்தில் இருந்து மார்பு வரையிலான பகுதி ஆகியவற்றை ஜாபர்கேன்பேட்டையில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதாக போலீசிடம் சொல்லியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.

அந்த பாகங்கள் பெருங்குடி குப்பை கிடங்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்பதால் அங்கே காவல் துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

கிரேன் மூலம் குப்பைகளை அகற்றி சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது காவல் துறை.

இந்த நிலையில் பாலகிருஷ்ணனை பள்ளிக்கரணை பொலிசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்டர்லி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.

அப்போது நீதிபதியிடம் சந்தியாவை நான் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் பாலகிருஷ்ணன். இதையடுத்து வருகிற 19 ஆம் திகதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாலகிருஷ்ணன். அவர் மீது கொலைக்குற்றம், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாலகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறை முடிவு செய்துள்ளது. என்றாலும் சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்கள் கிடைத்தபிறகே வழக்கு முடிவடையும் என்பதால் காவல் துறையும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.