பேத்தி வயது அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர் : அடுத்து நேர்ந்த பிரச்சனை!!

370

இளம் பெண்ணை திருமணம் செய்த முதியவர்

இந்தியாவில் 24 வயது இளம் பெண்ணை 67 வயது முதியவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்தவர் ஷம்சீர் சிங் (67). இவருக்கும் நவ்பிரீத் கவுர் (24) என்ற அழகிய இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

வயது வித்தியாசம் மிக அதிகமாக உள்ள இத்தம்பதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் குடும்பத்தினரால் தங்களது உயிருக்கு ஆபத்து என நீதிமன்றத்தை ஷம்சீரும், நவ்பிரீத்தும் நாடியுள்ளனர்.

அதாவது தங்களது உறவுமுறையை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஏற்காததால், அவர்களால் தங்களுக்கு எதாவது நேர்ந்துவிடும் என பயப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஷன்சீரும், நவ்பீரீத்தும் கருத்து கூற மறுத்துவிட்டனர்.