மரணச் சடங்கிற்கு வந்த 57 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

223

57 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்தியாவில் மரணச் சடங்கில் கலந்துகொள்ளச் சென்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 57 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மரண நிகழ்வில் கலந்து கொள்ள உத்திரபிரதேச மாநிலத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்தவர்கள் இணைந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். சிலர் அதை எடுத்து கொண்டு ஊரில் இருந்தவர்களுக்கும் வழங்கி உள்ளனர். இதில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்அடுத்ததுடுத்து 57 பேர் பலியாகினர்.

மேலும் 33 பேர் அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.