மனைவியின் தவறான தொடர்பு : போட்டுக்கொடுத்த அக்கம்பக்கத்தார் : மரணத்தின் தருவாயில் கணவர் கூறிய வார்த்தைகள்!!

655

கணவர் கூறிய வார்த்தைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரப்ரவரி 8 ஆம் திகதி நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் கன்முண்னே 300 அடி உயரம்முள்ள மின் இணைப்பு கோபுரத்தின் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்துபோன ரமேஷ்க்கு கீதா என்ற மனைவியும் கிரிஷா மற்றும் ஆர்யா என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். ரமேஷ் சென்னையில் தங்கி கட்டிடங்களில் கம்பி கட்டும் சென்டரிங் வேலை செய்து வந்துள்ளார். மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை சொந்த ஊருக்கு வந்த மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வார்.

இந்நிலையில் இவர் இறந்துபோவதற்கு முன்னர் தனது மனைவியின் தவறான நடத்தையே தான் இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு காரணம் என கூறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊரில் உள்ள ரமேஷ் நண்பர்கள் சிலர், உன் மனைவியின் நடத்தை சரியில்லை என ரமேஷிடம் தெரிவித்ததையடுத்து கோபம் கொண்ட ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அப்படியே தங்கிவிட்டார். நீ யாரையோ வச்சிக்கிட்டு எனக்கு துரோகம் செய்யற என கணவன் – மனைவி இருவருக்கும் பிப்ரவரி 8ந்தேதி விடியற்காலை சண்டை வந்துள்ளது.

இதில் ஆத்திரமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வந்தவர் பெரம்பலூர் டூ நகரி இடையே செல்லும் உயர்மின் கோபுரம் அந்த கிராமத்தின் வழியாக செல்கிறது. மின் இணைப்பு தரப்படாத 300 அடி உயரம்முள்ள அந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.

என் மனைவி எனனை மதிக்கவில்லை, இதனால் கீழே விழுந்து சாகப்போகிறேன் என மின்கோபுரத்தின் கீழே கூடியிருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொலிசார் மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல்சொல்ல அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் ரமேஷ் வைத்திருந்த செல்போன்க்கு தொடர்பு கொண்டபோது, அவர் எடுத்து பேசியபோது, கள்ளத்தொடர்பு வைத்துள்ள என் மனைவியால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கீழே நின்றுகொண்டிருந்த மனைவி மற்றும் பிள்ளைகளும் கதறி அழுதும் அதனை கண்டுகொள்ளாத ரமேஷ் , மேலிருந்து கீழே குதித்தார். 200 அடியில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கம்பியில் தலை மோதியதோடு உடல் சிக்கி அந்தரத்தில் தொங்கியது.

மோதிய வேகத்தில் இறந்த ரமேஷ் உடலை ஆரணி தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு பின் ஒப்படைக்கப்பட்டது. தனது மனைவிக்கு இப்படி ஒரு வாழ்நாள் தண்டனையை கொடுத்துவிட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.