அவளிடம் ஏன் பேசினாய்? 14 வயது சிறுவனை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்!!

173

சிறுவனை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்

இந்தியாவில் தங்களுடைய பெண் தோழியுடன் பேசிய 14 வயது சிறுவனை சக சிறுவர்கள் குத்திக்கொலை செய்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியில் 14 வயது சிறுவன் ஒருவன் பெண் தோழியுடன் பேசியுள்ளான். இந்த விடயம் குறித்த பெண் தோழியின் 4 நண்பர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுவனின் வீட்டிற்கு சென்ற 4 சிறுவர்கள், அவனை வெளியில் அழைத்து பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நான்கு சிறுவர்களும் அந்த சிறுவனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

அதன் பின்னர், உயிருக்கு போராடும் நிலையில் இருந்த குறித்த சிறுவன் உதவிக்கு கத்தியுள்ளான். சத்தம் கேட்டு வந்த அவனது தாய் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், மூன்று சிறுவர்களை கைது செய்ததுடன் மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.