மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார் : மகள் விடுத்த உருக்கமான கோரிக்கை!!

401

மரண தண்டனையை எதிர்நோக்கும் தாயார்

தெய்வ நிந்தனை பேரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்மணியை பாகிஸ்தானைவிட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என அவரது மகள் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

இஸ்லாம் மதத்தையும் இறை தூதரையும் இழிவாக பேசியதாக கூறி பாகிஸ்தான் நாட்டில் Asia Bibi என்பவர் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்து கடந்த ஆண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் பாகிஸ்தான் நாட்டின் மத அடிப்படைவாத கும்பலிடம் சிக்காமல் இருக்க, அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் அவர் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளார். Asia Bibi விடுவிக்கப்பட்ட விவகாரம் பாகிஸ்தானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பல மாகாணங்களில் கலவரமும் வெடித்தது.

ஞாயிறன்று, கனடாவில் உள்ள ரகசிய இருப்பிடத்தில் இருந்து பேசிய Asia Bibi-இன் 18 வயதான இளைய மகள் Eisham Ashiq, தாயார் தங்களுடன் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும், அவரது நிலையை எப்போதும் எண்ணியிருப்பதாகவும், தொலைபேசி வழியாக மட்டுமே தற்போது அவருடன் பேச முடிகிறது எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பாகிஸ்தானில் இருந்து அவர் வெளியேற அங்குள்ள அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் எனவும், பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக தாங்கள் ஒருபோதும் பேசியது இல்லை எனவும், தாங்கள் பிறந்த மண்ணை ஒருபோதும் இழிவாக பேசியது இல்லை எனவும் Eisham Ashiq கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார்.