600 கோடிக்கு அதிபதி வெட்டிக்கொலை : இங்கிலாந்து பெண்ணுடன் முறை தவறிய காதல் : சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்!!

843

சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

பெங்களூரில் கடந்த 7 ஆம் திகதி பிரபல தாதா லக்ஷ்மணப்பா பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில அதிர்ச்சி பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. தாதாவின் கொலை குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு முறை தவறிய காதலே பின்னணி காரணமாக அமைந்துள்ளது.

பெங்களூரில் லக்ஷ்மணப்பா வசித்து வந்த வீட்டருகே வசித்து வந்த கமலி, தற்போது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சிறுவயது முதலே லக்ஷ்மணப்பாவுக்கு கமலியை நன்றாக தெரியும். லஷ்மணப்பா திருமணத்தில் கூட கமலி, சிறுமியாக இருந்தபோது கலந்துகொண்டார்.

இந்நிலையில் வளர்ந்து பெரியவள் ஆன கமலி, நடனப்பள்ளி நடத்தி வந்த ருபேஷ் கௌடா என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இந்த காதலுக்கு கமலியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து, இந்த காதலை தடுக்குமாறு லஷ்ணப்பாவின் உதவியை நாடியுள்ளார்.

ஆனால், கமலியின் தந்தையிடத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கமலியை படிக்கச் சேர்த்து விடலாம் என்று கூறிய லஷ்மணப்பா, கமலியின் படிப்பிற்காக லட்சக்கணக்கான பணத்தினை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் தான் லஷ்மணப்பா, கமலி மீது காதல்வயப்பட்டுள்ளார். கமலி தன் காதலர் ருபேஷ்வுடனனா காதலைக் கைவிட மறுத்தார். அதேவேளையில், லக்ஷ்மணா அனுப்பும் பணத்தையும் பெற்று வந்துள்ளார்.

லஷ்ணப்பாவின் காதலால் கோபம் அடைந்த கமலி, அவர் உயிருடன் இருக்கும்வரை நிம்மதியாக வாழ முடியாது என்றும் நமது காதல் ஒன்று சேராது என காதலன் ருபேஷிடத்தில் கூறியுள்ளார் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ருபேஷிற்கு 1 லட்சம் ரூபாய் பணம் அனுப்பிவைத்து, அந்த பணத்தினை வைத்து கூலிப்படையை ஏவி லஷ்மணப்பாவை கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார் கமலி.

அதன்படியே, தான் இங்கிலாந்தில் இருந்து வருவதாக பொய்கூறி ஹோட்டல் அறை புக் செய்ய கூறியதோடு மட்டுமல்லாமல் எந்த சாலை வழியாக என்னை பார்க்க வருகிறீர்கள் என்ற விவரத்தை கேட்டு, அதனை தனது காதலனிடம் தெரிவித்து கொலையை கச்சிதமாக முடித்துள்ளனர். தாதாவின் இந்த கொலை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.