15 வயதில் எனக்கு மாதவிடாய் நின்றது.. முகம் சிவப்பாகியது : அதன்பின் சிறுமி அனுபவித்த கஷ்டம்!!

656

பிரித்தானியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய 15 வயதில் மாதவிடாய் நின்ற போது அனுபவித்த துன்பம், பற்றி கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் அன்னாபெல்லு. தற்போது 17 வயதாகும் இவருக்கு தன்னுடைய 15 வயதில் முதல் முறையாக மாதவிடாய் வராமல் நின்றுள்ளது.

ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சாதரணமாக விட, அதன் பின் உடல் வெப்பமடைந்து, சிவப்பு நிறமாகியதால், உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று நலம் திரும்பினார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் பள்ளியில் அறிவியல் பாட வகுப்பில் இருந்த போது, திடீரென்று என்னுடைய முகம் சிவப்பாக மாறியது. இதனால் இதைக் கண்ட ஆசிரியர், இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதன் காரணம் என்று கூறினார்.

இதனால் நான் இது தொடர்பாக இணையதளங்களில் தேடினேன். அப்போது இதன் விளைவுகளை கண்ட போது மிகவும் சோகமாக இருந்தது. அவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம் என்று நான் பயப்பட்டேன். இருப்பினும் அந்நேரத்தில் அழ வேண்டுமென நினைத்தேன்.

எனது உணர்வுகளை பற்றி அதிகம் எழுதினேன். கலை படைப்புகள் மூலம் எனது உணர்வுகளை வெளிக்காட்டவும் முயற்சித்தேன். தன்னுடைய கருத்தரிக்க முடியாத நிலைமையை கட்டாயமாக தேற்றிக்கொள்ள வேண்டிய நேரமுமாகவும் இது அமைந்தது.

நான் இன்னமும் கஷ்டப்படப் போகிறேன் என்பது தெரிகிறது. இருப்பினும் என்னுடைய வாழ்க்கையை வாழப்போகிறேன், மகளால் கருத்தரிக்க முடியாது என்பதை நினைத்து தாய் தான் தினம் தினம் நினைத்து கவலைப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

20 வயதுக்கும் குறைவான பத்தாயிரம் பெண்களில் ஒருவர் மட்டுமே இது போன்ற மாதவிடாய் நிறுத்தம் பிரச்சனை வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அன்னபெலுக்கு மாதவிடாய் நின்றதற்கு காரணம், கருப்பைகள் முட்டைகளை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டதால், அவரது ஸ்ட்ரோஜன் நிலைகள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெரிய இடை மற்றும் மார்பகங்கள் போன்ற பெண்ணின் உடல்கூறுளை மேம்படுத்த காரணமான ஹார்மோன் ஸ்ட்ரோஜன் ஆகும்.

மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை கையாள ஹார்மோன் மாற்று மருத்துவ சிகிச்சை அவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர் மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.

ஒரு நாள் மத்திரை எடுக்காமல் விட்டுவிட்டால், சிவப்பு படுதல் தோன்றிவிடும். எனது வயதில் இருப்பவர்கள் என்னைவிட மிக மோசமான நிலையில் இருக்கும்போது, என்னை நினைத்து வருந்த நான் விரும்பவில்லை என்று அன்ன பெல் கூறியுள்ளார்.