ஐந்து வயதில் 15 வயதுக்கான பாலுணர்வு பெற்றிருந்தேன் : இளைஞனின் அதிசய வாழ்க்கை!!

744

இளைஞனின் அதிசய வாழ்க்கை

அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த பேட்ரிக் பர்லே என்பவர் ஹார்மோன் பிரச்சனை காரணமாக இளம் வயதிலேயே பருவம் அடைந்ததையும் அதனால் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

டெஸ்டோடாக்சிகோசிஸ் என்ற அரிதான மரபணு பிரச்சனையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது, ஆணின் மிக முக்கிய பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் வயதுக்கு வருகிறபோது மற்றும் வளரிளம் வயதோடு தொடர்புடைய மாற்றங்களை உருவாக்குகிறது.

ஆனால், இந்த ஹார்மோன் பிரச்சனை காரணமாக வயதுக்குவரும் முன்னரே முதிர்ச்சியடையும் நிலைக்கு பேட்ரிக் ஆளாகியுள்ளார். பேட்ரிக் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக மரபணுவில் டொஸ்டோடாக்சிகோசிஸ் கடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பேட்ரிக்கும் பாதிக்கப்பட்டிருந்தார். உடலின் அந்தரங்க இடங்களில் முடி வளர தொடங்கியபோது, பேட்ரிக் பர்லேவுக்கு இரண்டு வயதுதான். ஆனால் குடும்பத்தினர் ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளவில்லை. முன்னதாகவே வயதுக்கு வந்துவிட்டதால், மூன்று வயதான பேட்ரிக் ஏழு வயதினருக்கு ஒத்த எடையையும், உயரத்தையும் கொண்டிருந்தார்.

பேட்ரிக் மூன்று வயதானபோது, அவரது உடலில் இருந்த டெஸ்டோஸ்டிரோன் நிலைகள் 14 வயதினருக்கு இருப்பதற்கு ஒத்ததாக இருந்தன.

டெஸ்டோஸ்டிரோனின் பாதிப்புக்களை தடுப்பதற்கான இலவச சிகிச்சைக்காக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

நீண்டகாலமாக ஒவ்வோர் இரவும், எனது காலில் நான் ஊசி போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. தனது உருவத்தின் காரணமாக பள்ளிகளில் கேலிக்கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார்.

பள்ளியின் மோசமான பையன் என முத்திரை குத்தப்பட்டதால் பள்ளிநாட்களையே வெறுத்துள்ளார். ஒன்பதாவது வயதில் புகைப்பிடிக்க தொடங்கிய நான், அதனை அடுத்து மரிஜூனா புகைக்க ஆரம்பித்தேன்.

மருத்துவ சிகிச்சையால் கட்டுப்பாட்டில் இருந்து வந்த எல்லா ஹார்மோன்களும், திடீரென மருந்தின்றி விடுவிக்கப்பட்டதால் எனது மோசமான நடத்தைகள் மீண்டும் ஆரம்பித்தன.

பதினைந்து வயதை அடைந்தபோதுதான், பிற சிறுவர்களைபோல உணர தொடங்கினேன். தனது வயதிற்கு ஒத்தவரைபோல தானும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.

போதை மருந்து எடுத்து கொண்ட நண்பாகளிடம் இருந்து விலகி படிக்கவும், விளையாடவும், தொடங்கினேன். மேலும், பல்கலைக்கழகம் செல்லவும் முடிவெடுத்தேன். அதன்பின்னர் எனது வாழ்க்கை மாறியது.

2015ம் ஆண்டு அவரது மனைவி மெரிடித் நெட் என்று அவர்கள் பெயரிட்ட மகனை பெற்றெடுத்தார். இந்த குழந்தைக்கு இத்தகைய எவ்வித மரபணு பிரச்சனையும் இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.