லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர் : காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

1124

வினோத் ஷெர்க்.

இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தில் லாட்டரியில் இரண்டு வீடுகள் கிடைத்தன. இதில் ஒரு வீட்டின் மதிப்பு 4.99 கோடி, மற்றொரு வீட்டின் மதிப்பு ரூ.5.80 கோடி ஆகும்.

இந்நிலையில் ரூ.5.80 கோடி மதிப்புடைய வீட்டை வினோத் வாஸ்து சரியில்லை என கூறி மேம்பாட்டு ஆணையத்திடமே திரும்ப ஒப்படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், லாட்டரியில் கிடைத்த இரண்டு வீடுகளை விரிவுப்படுத்த நினைத்து வாஸ்து ஆலோசகருடன் ஆலோசித்தேன்.

அப்போது ரூ.5.80 கோடி மதிப்புடைய வீட்டில் வாஸ்து சரியில்லை எனவும், அங்கு சில மாற்றங்களைச் செய்தால் சமூக வாழ்வில் சிறப்பாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார். ஆனால், அவர் கூறிய மாற்றங்களை அந்த வீட்டில் மேற்கொள்ள முடியவில்லை.

ஆனால், 4.99 கோடி மதிப்புள்ள வீட்டில் அந்த மாற்றங்களைச் செய்ய முடிந்தது. அதனால் தான் ரூ.5.80 கோடி வீட்டை மீண்டும் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனிடையில் வினோத் திருப்பி கொடுத்த வீடு அவருக்கு அடுத்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபருக்கு கொடுக்கப்படவுள்ளது.